Saturday, April 24, 2021

tamil

Like a river  the fence goes on forever. 

Two little girls, refugees, stand on either side,

identical in their tattered dresses, braided hair and innocent smiles. 

One finds an abandoned plank,

and slips one end through a gap in the fence. 

The other grasps it and pulls it towards herself. 

With a  rock carefully placed, she creates a sense of balance for themselves in this topsy-turvy turvy world.

Now they fly up to touch the sky in turn weightlessly matching the other at each end

and joyfully slide down to the middle of that fence,

their laughter gurgling like a stream in the dismal space. 


As they went up and down 

and up and down

on either side of that fence 

so did their sea saw wing with them

like the scales on Lady Justice's hands. 



 




நதி மூலம் போல

வேலியின் முடிவுகள்

பாவாடை சட்டையும்

ஒற்றைப் பின்னலும்

அசட்டுச் சிரிப்பும் அணிந்திருந்த

இரண்டு அகதிக் கன்றுக்குட்டிகள்

 

ஒரு கன்றுக்குட்டி

எங்கோ கண்டுபிடித்த செவ்வக அட்டைக் கோத்தாவை 

கீழ் துவாரம் வழியே சொருக

மறு குட்டி 

அதன் மறுபக்கத்தை

லாகவமாகப்  பிடித்துக்கொண்டது.

பக்கத்தில் கிடந்த பாறைத்துண்டை

நடுக்கல்லாகப் பொருத்தி

அட்டைக் கோத்தாவை 

அதன் மேலே அமர்த்தி

சீ-சா கட்டிக்கொண்டன.

ஒன்றன் பின் ஒன்றாக,

இல்லாத எடை கொண்டு

சீ-சாவில் ஒரு பொழுது ஊனவும்

மறு பொழுதே

அந்தர சிகரத்தைத் தொட 

தாவிய பின் சரிந்தும்,

இதயங்கள் துள்ளத் துள்ள விளையாடின.

சீ-சாவும் அவற்றுடன்

சாய்ந்து சாய்ந்து விளையாடியது.

நீதித் தராசின் சாயல் தெரிந்தது.

No comments:

Post a Comment